தென்காசி, செங்கோட்டை, களக்காடு, பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியங்கள் தவிர, எஞ்சிய ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 34 ஊராட்சிகளில் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சிப் பகுதிக்குள் வசிப்பவராகவோ அல்லது அருகில் உள்ள ஊராட்சிகளில் வசிப்பவராகவோ இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பொதுப்பிரிவினர் 18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 18 வயது முதல் 35 வயதுடையவராக இருக்க வேண்டும். ஊராட்சி செயலர் பணி நியமனத்திற்கு விண்ணப்பிக்க தேவையான இதர தகுதிகள், ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களின் விவரம், இன சுழற்சி இடஒதுக்கீடு மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியவை www.tirunelveli.nic.in என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட தனி அலுவலர்களின் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேல்விஷாரம் வால்மீகிஸ்வரா் கோயில் பிரதோஷ வழிபாடு

1.5.1976: மொழித் திணிப்புக்கு பிரதமர் இந்திரா காந்தி எதிர்ப்பு!

மனைவி பிரிந்து சென்றதால் இளைஞா் தற்கொலை

நாச்சியாா்கோவில் திரெளபதி அம்மன் கோயில் குடமுழுக்கு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

