புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

நெல்லையில் தடகளப் போட்டிகள்: 232 வீரர்கள் பங்கேற்பு

திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற தடகளப் போட்டியில் மாணவர்கள், பொதுப் பிரிவினர் உள்பட 232 பேர் பங்கேற்றனர்.

Updated On :29 மார்ச் 2018, 1:53 am

திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற தடகளப் போட்டியில் மாணவர்கள், பொதுப் பிரிவினர் உள்பட 232 பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருநெல்வேலி பிரிவு சார்பில் மார்ச் மாத விளையாட்டுப் போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தொடர் ஓட்டம், நீச்சல் போட்டிகள், குழு விளையாட்டுப் போட்டிகள், குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து பள்ளி மாணவர், மாணவியர், பொதுப்பிரிவினர் உள்பட 232 பேர் கலந்து கொண்டனர். 
மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் மூன்று இடங்கள் பெற்ற வீரர்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆர்.வி. வீரபத்திரன், பதக்கங்கள், சான்றுகள் வழங்கிப் பாராட்டினார். நிகழ்ச்சியில், நீச்சல் பயிற்றுநர் கர்ணன், குத்துச்சண்டை பயிற்றுநர் சிவகுமார்பால், ஜிம்னாஸ்டிக் பயிற்றுநர் தாசன், உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில், தடகளப் பயிற்றுநர் சத்யகுமார் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.