கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

மின்வாரிய காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: சிஐடியூ மாநாட்டில் வலியுறுத்தல்

மின்வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என சிஐடியூ தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

Updated On :5 நவம்பர் 2018, 7:46 am IST

மின்வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என சிஐடியூ தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
அமைப்பின் மரபுசாரா எரிசக்தி ஆதாரங்கள் திட்ட 21ஆவது மாநாடு பாளையங்கோட்டையில் மகாராஜநகரில் உள்ள அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அந்தோணி கிளமென்ட் தலைமை வகித்தார். அமைப்பின் திருநெல்வேலி மண்டலச் செயலர் எம். பீர்முகம்மது தொடங்கிவைத்தார். செயலர் கணேசன் அறிக்கை வாசித்தார். மாநிலச் செயலர் எஸ். வண்ணமுத்து, முன்னாள் செயலர் ஏ. கிருஷ்ணன், திட்டப் பொருளாளர் சங்கர், ஓய்வு பெற்ற நல அமைப்பின் மாநில துணைப் பொதுச்செயலர் எஸ். ராஜாமணி, முன்னாள் தலைவர் எஸ். பூலுடையார், கூட்டுறவு சிக்கன நாணய சங்கத் தலைவர் டி. கந்தசாமி ஆகியோர் பேசினர்.
தீர்மானங்கள்: மின்வாரியத்தை பிரிக்காமல் தொடர்ந்து பொதுத் துறையாக செயல்படுத்த வேண்டும்; மின்வாரியத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்; மின்வாரியத்தை தனியாருக்கு விற்கும் முயற்சியை கைவிட வேண்டும்; ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; துணை மின் நிலையங்களில் அவுட் சோர்சிங் முறையை ரத்து செய்ய வேண்டும்; புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக எம்.கே. மாடசாமி, செயலராக பெ. கணேசன், பொருளாளராக கே. ஐயப்பன், துணைத் தலைவர்கள், துணைச் செயலர்கள் உள்பட 19 பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
பொருளாளர் அசோக் வரவேற்றார். துணைத் தலைவர் வை. பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.