வ.உ. சிதம்பரனாரின் 82 ஆவது நினைவு தினத்தையொட்டி, திருநெல்வேலி மாநகராட்சி திடல் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை மாலை யணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் வ.உ.சி. சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பூ. முத்துராமலிங்கம் தலைமையில் அதிகாரிகள் மாலை அணிவித்தனர். இதைத் தொடர்ந்து துறை சார்பில் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த வ.உ.சி.யின் வரலாறு குறித்த புகைப்படங்கள், உட்புற நூலகத்தை மாவட்ட வருவாய் அலுவலர் பார்வையிட்டார்.
அதிமுக சார்பில், மாநகர் மாவட்டச் செயலர் தச்சை ந. கணேசராஜா தலைமையில் மாநிலங்களவை உறுப்பினர் எஸ். முத்துக்கருப்பன், கட்சியின் அமைப்புச் செயலர் சுதா கே. பரமசிவன், அவைத் தலைவர் பரணி ஏ. சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவை அமைப்பாளர் ஜெரால்டு, சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் மகபூப் ஜான் உள்பட பலர் மாலை அணிவித்தனர்.
பாஜக சார்பில் கிழக்கு மாவட்டத் தலைவர் அ.தயாசங்கர் தலைமையில் மாவட்டப் பொதுச்செயலர் மகராஜன், மாவட்ட அமைப்புச் செயலர் டி.வி. சுரேஷ், மாநில விவசாய அணி செயலர் கே. கணேஷ்குமார் ஆதித்தன், மாநில இளைஞரணி செயலர் வேல். ஆறுமுகம் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் கே. சங்கரபாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர். தனுஷ்கோடிஆதித்தன், மாநில துணைத் தலைவர் ஹெச். வசந்தகுமார் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்டத் தலைவர் எஸ்.கே.எம். சிவக்குமார், மாவட்டப் பொருளாளர் எஸ். ராஜேஷ்முருகன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
திமுக சார்பில் பாளையங்கோட்டை விளையாட்டு மைதானம் அருகிலுள்ள வ.உ.சி. சிலைக்கு எம்எல்ஏக்கள் ஏ.எல்.எஸ். லட்சுமணன், டி.பி.எம். மைதீன்கான் ஆகியோர் தலைமையில் தனித்தனியாக வந்து முன்னாள் எம்எல்ஏ என். மாலைராஜா உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் கல்லூர் இ. வேலாயுதம் தலைமையில் மாவட்ட அவைத் தலைவர் பூ. ஜெகநாதன், பொருளாளர் ஏ.பி. பால்கண்ணன், மாவட்டத் துணைச் செயலர் எம்.சி. ராஜன், பகுதிச் செயலர் அசன் ஜாபர்அலி, பேச்சிமுத்து உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தின் மாநில தலைவர் புளியரை எஸ். ராஜா தலைமையில் மண்டலச் செயலர் எஸ்.கணபதியப்பன் உள்பட பலர் மாலை அணிவித்தனர்.
மதிமுக சார்பில் மாநகர் மாவட்டத் தலைவர் கே.எம்.ஏ. நிஜாம், மாவட்டச் செயலர் தி.மு. ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலும், தேமுதிக சார்பில் மாவட்டச் செயலர் ஏ. முகம்மது அலி தலைமையில் மாவட்டத் துணைச் செயலர் எம். பழனிக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் பி. ஆனந்த மணி உள்ளிட்டோரும், தமிழ்நாடு கொங்கு பேரவையின் மாநில தலைவர் தனியரசு எம்.எல்.ஏ. தலைமையிலும் மாலை அணிவித்தனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் சுத்தமல்லி எம்.எஸ். முருகேசன் தலைமையில் கட்சியின் மாநில செயலர் ஏ.பி.சரவணன் உள்ளிட்டோரும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் அ. வியனரசு தலைமையிலும் மாலை அணிவித்தனர்.
இது தவிர அனைத்து வெள்ளாளர் மகா சபை உள்பட பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமெரிக்காவில் புதிய சாதனைப் படைத்த நடிகர் சூர்யா!

நீதிக் கதைகள்! ஒரு தாயின் தவம்!

14 முதல்வர்கள் மீது தீவிர குற்றவியல் வழக்குகள்! பட்டியலில் விஜய்! முதலிடம் யாருக்கு?

எல்லா புகழும் தளபதிக்கே! அமைச்சரின் பேச்சை நிறுத்திய பேரவைத் தலைவர்! | TVK
விடியோக்கள்

யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? அமைச்சர் நிர்மல் குமாருக்கு பேரவைத் தலைவர் அறிவுரை!


