சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

இந்து மக்கள் கட்சியினர் போராட்டம்

இந்து மக்கள் கட்சியினர் திருநெல்வேலி சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :22 அக்டோபர் 2018, 2:56 am

இந்து மக்கள் கட்சியினர் திருநெல்வேலி சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எஸ்.உடையார் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் வி.மணிகண்டன், தென்மண்டல மகளிரணித் தலைவி ஏ.காந்திமதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
கேரளத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து பெண்களும் சென்று வழிபடலாம் என்பதைத் தடுக்கும் வகையில் சிறப்பு சட்டம் உருவாக்க வேண்டும். ஐயப்ப பக்தர்கள் மீது தடியடி நடத்திய கேரள முதல்வர் பினராயி விஜயன் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில், நிர்வாகிகள் எம்.கண்ணன், மு.சிவசக்தி, எஸ்.செல்வக்குமார், ஏ.அரிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.