தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

கடனாநதியில் சிறப்பு ஆரத்தி வழிபாடு

தாமிரவருணி மகா புஷ்கரம் விழாவை முன்னிட்டு, கிளை நதியான கடனாநதியில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ஆரத்தி வழிபாடு நடைபெற்றது).

Updated On :22 அக்டோபர் 2018, 3:00 am

தாமிரவருணி மகா புஷ்கரம் விழாவை முன்னிட்டு, கிளை நதியான கடனாநதியில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ஆரத்தி வழிபாடு நடைபெற்றது).
தாமிரவருணியில் மகா புஷ்கரம் விழா கடந்த அக். 11இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தாமிரவருணி நதியின் கிளை நதியான கடனாநதியிலும் சிறப்பு ஆரத்தி வழிபாடு நடைபெற்றது.  இதை முன்னிட்டு விநாயகர் பூஜை, ஜெபம், நவ வித அபிஷேகம், ஷோடச தீபாராதனை, பஞ்ச தீபாராதனை, பஞ்ச நைவேத்தியம் ஆகியவை நடைபெற்றன.  நிகழ்ச்சியில் கீழாம்பூர், ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு புனித நீராடினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.