புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

திசையன்விளையில் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி ஊர்வலம்

திசையன்விளையில் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி விழா ஊர்வலம் நடைபெற்றது.

Updated On :3 செப்டம்பர் 2018, 2:27 am

திசையன்விளையில் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி விழா ஊர்வலம் நடைபெற்றது.
கிருஷ்ண ஜயந்தியையொட்டி, செல்வமருதூர் பெரியம்மன் கோயிலில் இருந்து ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி வரை நடைபெற்ற ஊர்வலத்தில், 100-க்கும் மேற்பட்ட சிறுவர்- சிறுமியர் ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு பங்கேற்றனர்.
தொடர்ந்து, அப்பள்ளியில்   ஸ்ரீகிருஷ்ணர் பற்றிய சிறுவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.  அவல், லட்டு உள்ளிட்ட பலகாரங்கள்  சிறுவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சேவா பாரதி தென்மண்டல அமைப்பாளர் முத்துச்செல்வி, திசையன்விளை அனைத்து வியாபாரிகள் சங்க பேரமைப்புத்  தலைவர் சாந்தகுமார், டி.பி.சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  ஏற்பாடுகளை சேவா பாரதி அமைப்பினர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.