திருநெல்வேலி மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்கும் நீர் நிலைகளின் விவரங்களை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலி நகரத்தைச் சேர்ந்தவர்கள் தாமிரவருணி ஆற்றில் குறிச்சி, வண்ணார்பேட்டை, பேராத்து செல்வி அம்மன் கோயில், மணிமூர்த்தீஸ்வரம், செங்கோட்டை பகுதியினர் குண்டாறு, அச்சன்புதூர் பகுதியினர் அனுமன் ஆறு, ஊத்துமலை, ஆலங்குளம் பகுதியினர் பாபநாசம் தாமிரவருணி ஆறு, வாசுதேவநல்லூர், சிவகிரி பகுதியினர் ராயகிரி பிள்ளையார் மந்தை ஆறு, கடையநல்லூர் பகுதியினர் மேல கடையநல்லூர் குளம், திருவேங்கடம் பகுதியினர் வேம்பார் கடற்கரை, திசையன்விளை, நான்குநேரி, மூன்றடைப்பு, பழவூர், ராதாபுரம், பணகுடி, விஜயநாராயணம், வள்ளியூர் பகுதியினர் உவரி கடற்கரையில் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்.
மூலைக்கரைப் பட்டி, திருக்குறுங்குடி, களக்காடு சுரண்டை பகுதியினர் பாபநாசம் தாமிரவருணி ஆறு, முன்னீர்பள்ளம், பாளையங்கோட்டை பகுதியினர் சிவன் கோயில் குளம், பாவூர்சத்திரம் பகுதியினர் பாவூர்சத்திரம் குளம், திப்பணம்பட்டி குளம், வீரவநல்லூர், திருப்புடைமருதூர் பகுதியினர் திருப்புடைமருதூர் தாமிரவருணி ஆறு, கல்லிடைக்குறிச்சி பகுதியினர் கல்லிடைக்குறிச்சி தாமிரவருணி ஆறு, அம்பாசமுத்திரம் பகுதியினர் பாபநாசம், விக்கிரமசிங்கபுரம் தாமிரவருணி ஆறு ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம் என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மாநில முதல்வா்கள் கொடியேற்ற காரணமானவா் கருணாநிதி: கனிமொழி

குழந்தைகளை போதைப் பழக்கத்திலிருந்து காக்க பெற்றோா் கவனம் செலுத்த வேண்டும்: கடலூா் ஆட்சியா்

கடலூரில் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற 54 போ் கைது

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றம்
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்


