பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

குற்றாலத்தில் கோயில் கடை மீட்பு

குற்றாலத்தில், அருள்மிகு குற்றாலநாதர் கோயிலுக்குச் சொந்தமான கடை புதன்கிழமை மீட்கப்பட்டது.

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

குற்றாலத்தில், அருள்மிகு குற்றாலநாதர் கோயிலுக்குச் சொந்தமான கடை புதன்கிழமை மீட்கப்பட்டது.
குற்றாலத்தில் வரசித்தி விநாயகர் கோயிலுக்கு மேல்புறம் உள்ள, குற்றாலநாதர் கோயிலுக்குச் சொந்தமான கடை வி. தனசேகர் என்பவருக்கு 1.7.96முதல் 30.6.99வரை 3 ஆண்டுக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. 
ஒப்பந்தக் காலம் முடிந்த பின்னரும் அவர் கடையை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கவில்லை. பின்னர், அவர் அளித்த தவறான தகவலின்பேரில் ஜெயராம் என்பவர், "அந்தக் கடை தனக்குச் சொந்தமானது; கோயில் நிர்வாகமும், வி.தனசேகரன் என்பவரும் சேர்ந்து தன்னை ஏமாற்றி, அந்த இடத்தை அபகரித்துவிட்டதாக' தென்காசி சார்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 
அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், ஒப்பந்தக் காலம் முடிந்தும் ஒப்படைக்காததால், கடையை தனசேகர் ஆக்கிரமித்ததாகக் கூறி திருநெல்வேலி இணை ஆணையர் அலுவலகத்தில் வழக்குத் தொடரப்பட்டது. கடையிலிருந்து தனசேகரை வெளியேற்ற திருநெல்வேலி உதவி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, வி.தனசேகரன், சென்னை ஆணையர் நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் பல வழக்குகள் தொடர்ந்தார். கோயில் சொத்தை ஒப்படைக்க தனசேகருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 
அதன்பேரில், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் தி. சங்கர், குற்றாலம் கோயில் நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன், கிராம உதவியாளர் கருப்பசாமி, ஓய்வுபெற்ற நில அளவையர் பட்டமுத்து, கோயில் செயல் அலுவலர் செல்வகுமாரி ஆகியோர் புதன்கிழமை சென்று, அந்தக் கடையை மீட்டு "சீல்' வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.