
"நெகிழி இல்லா நம்ம நெல்லை' விழிப்புணர்வு: 2 ஆயிரம் பெண்களுக்கு துணிப்பைகள் விநியோகம்
நெகிழி இல்லா நம்ம நெல்லை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலியில் நடைபெற்ற விழாவில் 2 ஆயிரம் பெண்களுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டன.
நெகிழி இல்லா நம்ம நெல்லை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலியில் நடைபெற்ற விழாவில் 2 ஆயிரம் பெண்களுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டன.
கிராம உதயம் அமைப்பு சார்பில் திருநெல்வேலி மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வழக்குரைஞர் எஸ்.புகழேந்தி பகத்சிங் வரவேற்றார். தலைமையாசிரியர் எஸ்.வேல்முருகன், கிராம உதயம் நிறுவனர் மற்றும் இயக்குநர் வி.சுந்தரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெண்களுக்கு துணிப்பைகளையும், விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கி ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பேசியது: 40 மைக்ரான் அளவுக்கு குறைந்த பிளாஸ்டிக் பைகள், பொருள்களால் சுற்றுப்புற சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
மட்கும் தன்மை கொண்ட துணிப்பை, கூடைகள் போன்றவற்றை பயன்படுத்த பெண்கள் உதவ வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் மாடுகளிடம் இருந்து கிடைக்கும் பாலிலும், பிளாஸ்டிக்கை உண்ணும் மீன்களிலும் ரசாயன வேதிப்பொருள்கள் கலந்திருப்பதும், அவை நம் உடலில் உபாதைகளை ஏற்படுத்துவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
சில நேரங்களில் மரபணு பிரச்னைகளையும் உருவாக்கும் அபாயம் உள்ளது. ஆகவே, பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்த பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துடன் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இந்தியாவில் சுமார் 50 சதவிதம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் ஆய்வில் தெரியவந்திருப்பது கவலையளிக்கிறது. சத்துணவு குறித்த விழிப்புணர்வை செப்டம்பர் மாதம் முழுவதும் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் உயரம்-எடை போன்றவை முறையாக உள்ளதா என்பதை அங்கன்வாடிகளுக்குச் சென்று தாய்மார்கள் சரிபார்க்க வேண்டும். வளர்இளம் பெண்கள், கர்ப்பிணிகள் ரத்த சோகை நோயால் பாதிக்கப்படாமல் தடுக்க அரசு சார்பில் செய்யப்படும் ரத்த பரிசோதனைகளில் பங்கேற்க வேண்டும். துரித உணவுகளை விடுத்து பாரம்பரிய சத்து மிகுந்த சரிவிகித உணவை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும் என்றார் அவர்.
விழாவில் 2 ஆயிரம் பெண்களுக்கு துணிப்பைகளும், 1 லட்சம் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. ஆர்.சுசிலா நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






