தமிழக -கேரள மாநிலங்களின் எல்லையான ஆரியங்காவு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை வனப்பகுதிக்குள் ஏற்பட்ட காட்டுத் தீயில் அரிய வகை மரங்கள் எரிந்து சேதமடைந்தன.
வனப்பகுதியில் தேக்கு மரங்கள் அடந்துள்ள பகுதிக்கு வேகமாக தீ பரவியதில், மலை உச்சிவரை பல கிலோ மீட்டர் தொலைவுக்கு தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. தீயை அணைக்கும் பணியில் கேரள வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீயை அணைக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. ஏற்கனவே கடந்த 7ஆம் தேதி ஆரியங்காவு தர்ப்பகுளம் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயால் அரிய வகை மரங்கள் எரிந்து நாசமாகின. தற்போதும் அதே நிலைமை ஏற்பட்டுள்ளது. காட்டுத் தீயின் உக்கிரத்துக்கு காடுகளில் வாழும் அணில், சிறுத்தை, காட்டுப்பன்றி, மிளா, உடும்பு உள்ளிட்ட விலங்கினங்களும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல்லையில் பேருந்து விபத்து: 25 பயணிகள் உயிா்தப்பினா்
கோவில்பட்டியில் இன்று மின்தடை

கோதையாற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
