ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

கங்கை கொண்டான் 4 வழிச் சாலையில் விபத்தை தடுக்க எச்சரிக்கை விளக்கு

திருநெல்வேலி அருகே நான்குவழிச் சாலையில் புதிய எச்சரிக்கை விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.

Updated On :25 பிப்ரவரி 2019, 9:56 am IST

திருநெல்வேலி அருகே நான்குவழிச் சாலையில் புதிய எச்சரிக்கை விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி அருகே உள்ள கங்கைகொண்டான் நான்குவழிச் சாலையில் அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன. இதனால் அப்பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்ய சிவப்பு சமிக்ஞை விளக்கு அமைக்கும் பணி நிறைவுற்று தயார் நிலையில் இருந்தது.  இந்த எச்சரிக்கை விளக்கு செயல்பாட்டுக்குக் கொண்டுவரும் நிகழ்ச்சி திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கங்கைகொண்டான் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் காளியப்பன் எச்சரிக்கை விளக்கின் செயல்பாட்டை இயக்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உதயகுமார், துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னரசு ஆகியோர் உடனிருந்தனர். தொலைவில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் இந்த சிவப்பு சமிக்ஞை விளக்கைப் பார்த்து வாகனத்தை எச்சரிக்கையுடன் ஓட்டுவர். இதனால் விபத்துகள் பெருமளவு தவிர்க்கப்படும். பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இந்த முயற்சியை வரவேற்றுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.