நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பாளை. சிவன் கோயிலில் சிறப்பு யாகம்

பள்ளி மாணவர்களின் கல்விக்காக,  பாளையங்கோட்டை அருள்மிகு கோமதியம்பாள் சமேத திரிபுராந்தீசுவரர் கோயிலில் சிறப்பு யாகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :25 பிப்ரவரி 2019, 9:52 am IST

பள்ளி மாணவர்களின் கல்விக்காக,  பாளையங்கோட்டை அருள்மிகு கோமதியம்பாள் சமேத திரிபுராந்தீசுவரர் கோயிலில் சிறப்பு யாகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாணவர்கள் தேர்வு காலங்களில் ஞாபகசக்தியுடன் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற வேண்டி ஸ்ரீ வித்யா ஞான சரஸ்வதி மஹா யாகம் நடைபெற்றது. இதையொட்டி சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. பின்னர், சரஸ்வதி முன்பு யாகசாலை பூஜை நடைபெற்றது. அரியகுளம் சாரதா மகளிர் கல்லூரி, புஷ்பலதா பள்ளி உள்ளிட்டவற்றை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்-மாணவிகள் பங்கேற்றனர். யாககுண்டத்தில் மாணவர்கள் தங்கள் கைகளால் சமித்துகளை ( அரசு, மாஞ்சுள்ளிகள்) நெய்யில் தொட்டு ஆவாகனம் செய்தனர். ஏற்பாடுகளை பாளையங்கோட்டை திருச்சிற்றம்பலம் வழிபாட்டு அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.