முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

வாஞ்சி இயக்கம் சார்பில் பராக்கிரமபாண்டியனுக்கு விழா

தென்காசியை தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் பராக்கிரம பாண்டியனுக்கு ஞாயிற்றுக்கிழமை விழா நடைபெற்றது.

Updated On :25 பிப்ரவரி 2019, 10:07 am IST

தென்காசியை தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் பராக்கிரம பாண்டியனுக்கு ஞாயிற்றுக்கிழமை விழா நடைபெற்றது.
வாஞ்சி இயக்கம் சார்பில் தென்காசி வர்த்தக சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு வாஞ்சி இயக்க நிறுவனர்- தலைவர் பி.ராமநாதன் தலைமை வகித்தார். தென்காசி வர்த்தக சங்கச் செயலர் பி.பரமசிவன் முன்னிலை வகித்தார்.
ஜே.சி.ஐ. தென்காசி கிளை தலைவர் கே.முருகேசன், மாரிராஜு, பரமானந்தம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகி சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேவாலயா ரவணசமுத்திரம் கிளையை சேர்ந்த சங்கிலிபூதத்தான் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.