தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

நெல்லையப்பர் கோயிலில் தைப்பூசத் திருவிழா தெப்ப உற்சவம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்பாள் கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி தெப்ப உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :24 ஜனவரி 2019, 2:49 am IST

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்பாள் கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி தெப்ப உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. கடந்த 15ஆம் தேதி திருநெல்வேலி ஊரின் பெயர்க் காரணத்தை விளக்கும் "நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்' நிகழ்வு நடைபெற்றது. இரவில் பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி-அம்பாள் வீதியுலா நடைபெற்றது.
தைப்பூச நாளான கடந்த 21ஆம் தேதி தீர்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி, சுவாமி நெல்லையப்பர், காந்திமதியம்பாள், அகஸ்தியர், தாமிரபரணி, குங்குலிய கலய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திர தேவர், அஸ்திர தேவி ஆகிய மூர்த்திகள் சுவாமி நெல்லையப்பர் கோயிலிலிருந்து எஸ்.என்.நெடுஞ்சாலை, கீழ்ப்பாலம் வழியாக கைலாசபுரத்தில் தாமிரவருணி நதிக் கரையோரமுள்ள சிந்துபூந்துறை தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சிறப்புத் தீபாராதனைக்குப் பின்னர் தீர்த்தவாரி நடைபெற்றது.
தொடர்ந்து, தெப்ப உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்காக வெளித்தெப்பம் அருகேயுள்ள மண்டபத்துக்கு மலர் அலங்காரத்துடன் வந்த நெல்லையப்பர்-காந்திமதியம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்பு, சுவாமி-அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தெப்பத்தில் எழுந்தருளினர். தெப்பம் வலம்வர போதுமான தண்ணீர் இல்லாததால் நிலையான தெப்பத்தில் சிறப்பு தீபாராதனைகள் மட்டும் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி-அம்பாளை தரிசனம் செய்தனர்.
தெப்பத் திருவிழா குறித்து சிவாச்சாரியார் ஒருவர் கூறுகையில், பஞ்சபூதங்களைக் கட்டுப்படுத்தும் சக்தியாக இறைவன் உள்ளார். பஞ்சபூதங்களில் ஒன்றான நீரும் அவரது கட்டுப்பாட்டில் உள்ளதை மக்களுக்கு வெளிப்படுத்துவதே தெப்பத்திருவிழா. 
தெப்பத்திருவிழா நாளில் மட்டும்தான் இறைவனின் தலைமுடியை பக்தர்கள் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும் என்பது  ஐதீகம். 9 சுற்றுகள் வலம் வரும் தெப்பத்தில் அமர்ந்து முதல் சுற்றின்போது வேதமந்திரங்களும், 2ஆவது சுற்றில் தேவாரமும், 3ஆவது சுற்றில் நாகசுரமும் இசைக்கப்படுகிறது. இவ்வாறாக ஒவ்வொரு சுற்றிலும் ஒரு சிறப்பம்சம் இருக்கும். இறுதிச் சுற்றின்போது கப்பல் வாத்தியம் எனப்படும் இசை முழங்க சுவாமியின் தெப்ப உற்சவம் நிறைவடையும் என்றார். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் பா. ரோஷினி, கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.