சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

நெல்லை அருகே இருவர் வெட்டிக் கொலை: 2 பேர் சரண்

திருநெல்வேலி அருகே உள்ள முன்னீர்பள்ளத்தில் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய

Updated On :24 ஜனவரி 2019, 2:52 am IST

திருநெல்வேலி அருகே உள்ள முன்னீர்பள்ளத்தில் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய   2 பேர் திருநெல்வேலி நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்துள்ளனர்.
 முன்னீர்பள்ளம் அருகே உள்ள மேலசெவலைச் சேர்ந்த முத்தையா மகன் செல்லக்குட்டி (40). இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு அம்மையப்பன் என்ற அய்யப்பன்(20), மகாராஜன் (19) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். தம்பதியிடையே  ஏற்பட்ட தகராறு காரணமாக தனது மகன்களுடன் செல்வி  கடந்த 10 ஆண்டுகளாக அதே பகுதில் இருக்கும் தனது தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார். இருப்பினும் மது அருந்திவிட்டு செல்வி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் செல்லக்குட்டி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாராம். 
 இஇந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு செல்லக்குட்டியும், அவரது நண்பரான அதேபகுதியைச் சேர்ந்த  வேல்சாமியும் (52) மேலசெவல் அருகே உள்ள ஆற்றுப்பகுதிக்குச் செல்லும் மரத்தடியில் அமர்ந்து  மது அருந்தினராம். அப்போது அங்கு வந்த கும்பல்  இவர்கள் இருவரையும் வெட்டிவிட்டு தப்பினராம். இரவு நேரம் என்பதால் வேல்சாமி மட்டுமே காயங்களுடன் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட  அவர் அங்கு புதன்கிழமை உயிரிழந்தார். 
இதற்கிடையே செல்லக்குட்டியை அவரது உறவினர்கள் புதன்கிழமை தேடியபோது அதே பகுதியில் முள்புதருக்குள் வெட்டுக்காயங்களுடன் சடலமாக கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்ததும் முன்னீர்பள்ளம் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து  போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  இவ்வழக்கு தொடர்பாக  மகாராஜன் மற்றும் அவரது தாத்தா மாடக்கண்ணு (69) ஆகியோர் திருநெல்வேலி 5-ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.