மகேஸ்வரி அவர்களின் தந்தை நாராயணசுவாமி ( வயது 83 ) வெள்ளிக்கிழமை இரவு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த செய்தியைக் கேட்ட காவல் ஆய்வாளர் மகேஸ்வரி திண்டுக்கல் மாவட்டம் வடமதுரைக்குப் புறப்பட இருந்தார். ஆனால் சுதந்திர தின விழாவில் அணிவகுப்பு நிகழ்ச்சியை முன்நின்று நடத்த வேண்டிய சூழல் இருந்தது. சனிக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் அணிவகுப்பு மரியாதையை முடித்து உடனடியாக தனது தந்தை உயிரிழந்த துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார். எந்த வகையிலும் குறைவின்றி அணிவகுப்பு நிகழ்த்திய பிறகுதான் அனைவருக்கும் இந்த செய்தி தெரிந்தது. இதனை தொடர்ந்து அனைவரும் கம்பீரமான அந்த காவல் அதிகாரியை ஆறுதல் தெரிவித்து வழி அனுப்பி வைத்தனர்.