ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருநங்கைகள் உள்பட 3 பேர் கொலை வழக்கு: கைதான 3 பேரில் ஒருவருக்கு மீண்டும் மருத்துவப் பரிசோதனை

பாளையங்கோட்டை மகாராஜநகரில் கொலை செய்யப்பட்ட 2 திருநங்கைள் உள்பட 3 பேர் கொலை வழக்கில் கைதான மூன்றுபேரில் ரிஷிகேஷுக்கு மீண்டும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 

News image
கோப்புப்படம்
Updated On :23 ஆகஸ்ட் 2020, 4:23 pm

DIN

பாளையங்கோட்டை மகாராஜநகரில் கொலை செய்யப்பட்ட 2 திருநங்கைள் உள்பட 3 பேர் கொலை வழக்கில் கைதான மூன்றுபேரில் ரிஷிகேஷுக்கு மீண்டும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 

திருநெல்வேலி அருகேயுள்ள நரசிங்கநல்லூர் பகுதியில் வசித்துவந்த முருகன் (28), திருநங்கைகள் பவானி (30), அனுஷ்கா (29) ஆகியோர் கடந்த சில நாள்களாக அடுத்தடுத்து மாயமாகினர். அவர்களை மீட்டுத் தரக் கோரி, திருநங்கைகள் சுத்தமல்லி காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர். மேலும், அவர்கள் அளித்த தகவலின் பேரில் ரிஷிகேஷ், ஸ்நோவின், செல்லத்துரை ஆகிய 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். 

இதில், பவானி, அனுஷ்கா, முருகன் ஆகியோர் கொல்லப்பட்டதும், உடல்கள் பாளையங்கோட்டை கக்கன்நகர் பகுதியில் உள்ள மதுரை-கன்னியாகுமரி நான்குவழிச் சாலை அருகேயுள்ள பாழடைந்த கிணற்றில் வீசப்பட்டதும் தெரியவந்தது. சடலங்களை காவல்துறையினர் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். 

இதையடுத்து இந்த கொலையில் தொடர்புடைய ரிஷிகேஷ், ஸ்நோவின், செல்லத்துரை ஆகிய மூன்றுபேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மூன்றுபேரும், திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு சனிக்கிழமை மருத்துவ பரிசோதனை முடிவுற்றது. 

இந்நிலையில், ரிஷிகேஷ் என்பவர் திருநங்கையாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்ததையடுத்து, அவருக்கு மீண்டும் ஞாயிற்றுக்கிழமை மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இந்த முடிவுகள் திங்கள்கிழமை வெளியாகும் எனவும், அதன்பின்னரே அவர்கள் மூன்று பேரையும் சிறையில் அடைப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.