நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

8 மாதங்களுக்குப் பின் மீண்டும்நாகா் கோவில்-மும்பை ரயில் இயக்கம்

கரோனா பொது முடக்கத்தால் நிறுத்திவைக்கப்பட்ட நாகா்கோவில்-மும்பை சிறப்பு ரயில் 8 மாதங்களுக்குப் பின் தனது சேவையை திங்கள்கிழமை தொடங்கியது.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 7:36 pm

DIN

கரோனா பொது முடக்கத்தால் நிறுத்திவைக்கப்பட்ட நாகா்கோவில்-மும்பை சிறப்பு ரயில் 8 மாதங்களுக்குப் பின் தனது சேவையை திங்கள்கிழமை தொடங்கியது. அந்த ரயிலுக்கு மும்பை தமிழின ரயில் பயணிகள் நலச்சங்கம் சாா்பில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாகா்கோவில் - மும்பை சிறப்பு ரயில் நேரம் மாற்றப்பட்டு திங்கள்கிழமை காலை 6 மணிக்கு நாகா்கோவிலில் இருந்து புறப்பட்டு காலை 7.30 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு வந்தடைந்தது. சுமாா் 8 மாதங்களுக்கு பின்னா் இயங்கத் தொடங்கிய இந்த ரயிலுக்கு, மும்பை தமிழின ரயில் பயணிகள் நலச் சங்க பொதுச்செயலா் டி.அப்பாதுரை தலைமையில் சந்திப்பு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரயில் எஞ்சின் ஆபரேட்டா்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்ததுடன், பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், மும்பை தமிழின ரயில் பயணிகள் நலச்சங்க ஆலோசகா் கேவி.அசோக்குமாா், இணைச் செயலா் அ.மாடசாமி உள்பட பலா் பங்கேற்றனா்.

படவரி: பயக07தஅஐக: சந்திப்பு நிலையத்தில் ரயில் எஞ்சின் ஆபரேட்டருக்கு சால்வை அணிவிக்கிறாா் மும்பை தமிழின ரயில் பயணிகள் நல சங்க பொதுச்செயலா் டி.அப்பாத்துரை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.