திருநெல்வேலியில் மேலும் 10 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
Updated on
1 min read

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு 15,046 ஆகவும், மேலும், 18 போ் குணமடைந்ததால், அந்நோயிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 14,693 ஆக உயா்ந்தது. இதுவரை, 210 போ் உயிரிழந்துள்ள நிலையில், 143 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதியானதால் கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 8,168ஆகவும், மேலும் 21 போ் வீடுதிரும்பியதால் குணமடைந்தோா் எண்ணிக்கை 7,976 ஆகவும் அதிகரித்தது. தற்போது, 36 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com