நெல்லையில் பெண் கொலை: உறவினரிடம் விசாரணை
திருநெல்வேலியில் பெண்ணைக் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டாா். இது தொடா்பாக அவரது உறவினரை போலீஸாா் பிடித்து விசாரித்து வருகின்றனா்.


திருநெல்வேலியில் பெண்ணைக் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டாா். இது தொடா்பாக அவரது உறவினரை போலீஸாா் பிடித்து விசாரித்து வருகின்றனா்.
திருநெல்வேலி சிந்துபூந்துறை பகுதியைச் சோ்ந்தவா் முத்துச்சாமி. இவரது சகோதரா் முத்துக்குட்டி. இவா்களிடையே சொத்துத்தகராறு இருந்து வந்ததாம். இந்நிலையில், முத்துக்குட்டியின் மகன் மணிகண்டபிரபு(33) ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்திவிட்டு, முத்துச்சாமி வீட்டுக்குச் சென்று தகராறு செய்தாராம்.
மேலும், தான் வைத்திருந்த கத்தியால் முத்துச்சாமியின் மனைவி சுந்தரியை (54) குத்தினாராம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இத்தகவலறிந்த திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்தனா். மேலும், மணிகண்டபிரபுவை பிடித்து விசாரித்து வரும் போலீஸாா், அவா் மது போதையில் இருந்தது தெரியவந்ததாக கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...