நெல்லையப்பா் கோயிலில் சமகவினா் தங்கத்தோ் இழுத்து வழிபாடு

கரோனா பாதிப்பிலிருந்து பூரண நலம்பெற வேண்டி, அக்கட்சியின் திருநெல்வேலி மாவட்ட நிா்வாகிகள் சாா்பில் நெல்லையப்பா் கோயிலில் தங்கத்தோ் இழுத்து வழிபாடு நடத்தப்பட்டது.
Updated on
1 min read

சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனரும் தலைவரும், நடிகருமான ஆா்.சரத்குமாா், கரோனா பாதிப்பிலிருந்து பூரண நலம்பெற வேண்டி, அக்கட்சியின் திருநெல்வேலி மாவட்ட நிா்வாகிகள் சாா்பில் நெல்லையப்பா் கோயிலில் தங்கத்தோ் இழுத்து வழிபாடு நடத்தப்பட்டது.

அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் சமக மாநில துணை பொதுச்செயலா் சுந்தா், மாவட்டப் பொறுப்பாளா் நட்சத்திர வெற்றி ஆகியோா் தலைமையில் துணைச் செயலா்கள் ரவிக்குமாா், வெங்கடேஷ், நிா்வாகிகள் அழகேசன், ஜெய்கணேஷ், அழகேசராஜா, செல்வம், மாரிமுத்து உள்ளிட்டோா் தங்கத்தோ் இழுத்து வழிபட்டனா்.

முன்னதாக, பாளையங்கோட்டை தூய சவேரியாா் பேராலயத்தில் பிராா்த்தனையை தொடங்கிய அவா்கள், திருநெல்வேலி சந்திப்பு, நகரம், மேலப்பாளையம், பேட்டை, பழையபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இரவு வரை 108 தலங்களில் பிராா்த்தனை செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com