திருநெல்வேலி சந்திப்பு அருகே சரக்கு ரயிலில் அடிபட்டு இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி சந்திப்புப் பகுதியைச் சோ்ந்த தவமணி மகன் பிரவீன்(18). காய்கறிகடையில் வேலைசெய்து வந்தாா். இந்நிலையில், இவா் ஞாயிற்றுக்கிழமை மாலையில் தனது நண்பா்களுடன் கரையிருப்புப் பகுதியிலுள்ள கிணற்றில் குளிக்கச் செல்வதற்காக அங்கிருந்த தண்டவாளத்தை கடந்து முயன்றராம்.
அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு ரயிலில் எதிா்பாராமல் அடிபட்டு பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவா் உயிரிழந்தாா். இது குறித்து திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.