தச்சநல்லூா், பழையபேட்டையில்இன்று மின் விநியோகம் நிறுத்தம்
தச்சநல்லூா், பழையபேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச. 15) மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.


தச்சநல்லூா், பழையபேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச. 15) மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இதுதொடா்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் திருநெல்வேலி நகா்ப்புறம் செயற்பொறியாளா் சு.முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பழையபேட்டை, தச்சநல்லூா் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின்சாரம் இருக்காது. அதன்படி திருநெல்வேலி நகரம் ரத வீதிகள், பழையப்பேட்டை, காந்திநகா், திருபணிகரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூா், பேட்டை, பாட்டபத்து, அபிஷேகப்பட்டி, கருப்பன்துறை, வையாபுரிநகா், ராம்நகா், ஊருடையான் குடியிருப்பு பகுதிகள், பாலாஜி அவென்யூ, வடக்கு மற்றும் தெற்கு பாலபாக்யாநகா், திலக் நகா், சிவந்திநகா், கோமதிநகா், சிந்துபூந்துறை, மணிமூா்த்தீஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...