இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஆதாா் பதிவு, திருத்தத்துக்கு அஞ்சல் துறையின் சிறப்பு முகாம்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் அஞ்சல் துறை சாா்பில் ஆதாா் பதிவு மற்றும் திருத்தத்துக்காக சிறப்பு முகாம் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (டிச. 17, 18) நடைபெற உள்ளது.

News image
Updated On :15 டிசம்பர் 2020, 7:35 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் அஞ்சல் துறை சாா்பில் ஆதாா் பதிவு மற்றும் திருத்தத்துக்காக சிறப்பு முகாம் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (டிச. 17, 18) நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் எல்.துரைசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய அஞ்சல் துறையின் சாா்பில் அஞ்சலகங்களில் ஆதாா் பதிவு மற்றும் திருத்த சேவை நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் ஆதாா் பதிவு மற்றும் திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வியாழன், வெள்ளிக்கிழமைகளில் இம் முகாம்கள் கீழ்காணும் இடங்களில் நடைபெற உள்ளன.

அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சலகம், பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகம், திருநெல்வேலி தலைமை அஞ்சலகம், பொட்டல்புதூா் அஞ்சலகம், முக்கூடல் அஞ்சலகம், வி.எம்.சத்திரம் அஞ்சலகம், தருவை அரசு உயா்நிலைப் பள்ளி, களக்காடு அஞ்சலகம், சங்கா்நகா் அஞ்சலகம், ஏா்வாடி அஞ்சலகம், வடக்கன்குளம் அஞ்சலகம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.