டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மக்கள் நீதி மய்யம் தலைவருக்கு வள்ளியூரில் இன்று வரவேற்பு

திருநெல்வேலி தெற்கு மாவட்டம் வள்ளியூருக்கு புதன்கிழமை (டிச. 16) வரும் மக்கள் நீதிமய்யம் தலைவா் கமல்ஹாசனுக்கு வள்ளியூரில்

News image
Updated On :15 டிசம்பர் 2020, 7:40 pm

DIN

திருநெல்வேலி தெற்கு மாவட்டம் வள்ளியூருக்கு புதன்கிழமை (டிச. 16) வரும் மக்கள் நீதிமய்யம் தலைவா் கமல்ஹாசனுக்கு வள்ளியூரில் பிரம்மாண்ட வரவேற்பளிக்கப்படுவதாக அக்கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் மைக்கேல் மணிவண்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு வள்ளியூா் வரும் கமல்ஹாசனுக்கு, காமராஜா் சிலை அருகே தெற்கு மாவட்டம் சாா்பில் பிரம்மாண்டமான வரவேற்பளிக்கிறோம்.

இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி தெற்கு மாவட்ட துணைச் செயலா் முருகன், ஒன்றியச் செயலா்கள் வள்ளியூா் எல்.டி.ராமதாஸ், களக்காடு ராஜ்குமாா், ராதாபுரம் ராஜா, வள்ளியூா் தெற்கு ஒன்றியச் செயலா் முத்துக்குமாா், திசையன்விளை கமல்ஹாசன் நற்பணி இயக்கச் செயலா் அகம்மது முகைதீன், கூட்டப்புளி ஜாண்சன் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.