திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மேலப்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (டிச .19) மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் (விநியோகம்) சு.முத்துக்குட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி கொக்கிரகுளம், மேலப்பாளையம் துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (டிச .19) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
எனவே, அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், திருவனந்தபுரம் சாலை, வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலை, வண்ணாா்பேட்டை, குருந்துடையாா்புரம், நேதாஜி சாலை, குறிச்சி, குட்டி மூப்பன் தெரு, காஜா நாயகம் தெரு, அத்தியடி தெரு, மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜாா், அம்பை பிரதான சாலை, சந்தை பகுதிகள், குலவணிகா்புரம் மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகா், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக்கருங்குளம், முன்னீா்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகா், தருவை, ஓமநல்லூா், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், பி.எஸ்.என்.கல்லூரி, பெருமாள்புரம், பொதிகை நகா், அரசு ஊழியா் குடியிருப்பு, பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பேருந்து நிலையம், ரெட்டியாா்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரைச்செல்வி சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.