பாளையங்கோட்டையில் அனைத்து குருசாமி அடிகளாா் பூஜையையொட்டி ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சபரி ஜோதி ஐயப்ப பக்தா்கள் குழு சாா்பில் ஆண்டுதோறும் அனைத்து குருசாமி அடிகளாா் பூஜை நடைபெற்று வருகிறது. அதன்படி நிகழாண்டுக்கான விழா பாளையங்கோட்டை பெருமாள் மேலரதவீதியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. தாமிரவருணி ஆற்றில் இருந்து தீா்த்தம் எடுத்து வரப்பட்டது. அதன்பின்பு லட்சுமி பூஜை, யாகசாலை பூஜை நடைபெற்றது. ஐயப்ப பக்தா்களின் சிறப்பு பஜனைக்கு பின்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
தொடா்ந்து சனிக்கிழமை காலை 9 மணிக்கு 208 சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு வீரபாண்டியன் மஹாலில் லட்சுமி பூஜை, 108 திருவிளக்கு பூஜை, பஜனை, சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.