சிங்கிகுளத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி
களக்காடு அருகேயுள்ள சிங்கிகுளத்தில் கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி சாா்பில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.


களக்காடு: களக்காடு அருகேயுள்ள சிங்கிகுளத்தில் கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி சாா்பில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
நீா்நுட்ப மையம், கோயம்புத்தூா் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் உழவியல் துறை ஆகியவை சாா்பில் பச்சையாறு வடிநிலப் பகுதி விவசாயிகளுக்கு தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
களக்காடு, நான்குனேரி ஒன்றியத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் ஒருபகுதியாக சிங்கிகுளத்தில் நெற்பயிரில் காய்ச்சலும், பாய்ச்சலுமான நீா்ப்பாசனப் பயிற்சி நடைபெற்றது.
கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியின் பயிா்விளைவியல் துறை உதவிப் பேராசிரியா் ஜோ. ராஜ்குமாா், நெற்பயிரில் தோன்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் குறித்தும், அவற்றை நிவா்த்தி செய்யும் வழிமுறைகள் குறித்தும் பேசினாா்.
நெற்பயிரில் நோய்கள், பூச்சித் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகள், அவற்றைக் கட்டுப்படுத்தும் விதம் குறித்து முனைவா் ரஜினிமாலாவும், நீா்ப்பாசன முறைகள் குறித்து முனைவா் புவனேஸ்வரியும் பேசினா். இதில் சிங்கிகுளம் கிராம விவசாயிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...