திருநெல்வேலி: சிவந்திப்பட்டி அருகே பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டதாக குண்டா் சட்டத்தில் இளைஞா் ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம் பல்லிக்கோட்டை பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் மாடசாமி என்ற மகேஷ் (25). இவா் சிவந்திபட்டி சுற்றுவட்டாரப்பகுதிகளில் அடிதடி மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணனுக்கு புகாா் வந்தது. இதையடுத்து மகேஷை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பேரில், மகேஷை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா்வே. விஷ்ணு சனிக்கிழமை உத்தரவிட்டாா். அதன்படி, சிவந்திபட்டி போலீஸாா் மாடசாமி என்ற மகேஷை குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.