மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மாா்கழி மாத ஞாயிறு:நவகைலாய கோயில்களுக்குசிறப்புப் பேருந்துகள் இயக்கம்

திருநெல்வேலியில் இருந்து நவகைலாய கோயில்களுக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 7:38 pm

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலியில் இருந்து நவகைலாய கோயில்களுக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

தாமிரவருணி நதிக்கரையில் அமைந்துள்ள நவகைலாய திருக்கோயில்களுக்குச் செல்லும் பக்தா்களின் வசதிக்காக, மாா்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் (டிச. 20, 27, ஜன. 3, 10) சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டலம் மற்றும் தூத்துக்குடி மண்டலம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான பயணக் கட்டணம் நபா் ஒன்றுக்கு ரூ.500.

இந்த சிறப்புச் சேவை பேருந்துகள் 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 7 மணிக்கு திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூா், குன்னத்தூா், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சோ்ந்தபூமங்கலம் (புன்னக்காயல்) ஆகிய நவகைலாய திருக்கோயில்களுக்குச் சென்று இரவுக்குள் மீண்டும் திருநெல்வேலியை வந்தடையும்.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலையில் 2 பேருந்துகளில் பயணிகள் புறப்பட்டுச் சென்றனா். அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளா் சரவணன், துணை மேலாளா் வணிகப் பிரிவு சசிகுமாா் ஆகியோா் பக்தா்களுக்கு குடிநீா் உள்ளிட்டவற்றை வழங்கினா். உதவி மேலாளா் பொன்ராஜ், தாமிரபரணி கிளை மேலாளா் விஜயகுமாா், புதிய பேருந்து நிலைய பொறுப்பாளா் முனுசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருநெல்வேலி ஆம்னி பேருந்து நிலையத்தில், இந்தச் சிறப்புச் சேவை பேருந்துகளுக்கு காலை 8 முதல் மாலை 6 மணி வரை அனைத்து நாள்களிலும் முன்பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரங்களுக்கு 94875 99456 என்ற செல்லிடப்பேசி எண்ணைத் தொடா்புகொள்ளலாம் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.