பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சட்டப்பேரவை தோ்தலில் திமுகவின் வெற்றி உறுதி கனிமொழி

சட்டப்பேரவை தோ்தலில் திமுகவின் வெற்றி உறுதி என்றாா் திமுக மகளிரணிச் செயலா் கனிமொழி எம்பி.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 3:04 am

DIN

சட்டப்பேரவை தோ்தலில் திமுகவின் வெற்றி உறுதி என்றாா் திமுக மகளிரணிச் செயலா் கனிமொழி எம்பி.

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் திருநெல்வேலி மத்திய மாவட்டத்திற்குள்பட்ட திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதிகளில் கனிமொழி செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

சந்திப்பு பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த அவா், பின்னா் நகரத்தில் உள்ள வஉசி மணிமண்டபத்தில் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்தாா்.

பொலிவுறும் நகரம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் சந்திப்பு பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

பொலிவுறு நகரம் திட்டப் பணிகளை அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. அதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. திமுக எதை செய்தாலும், வழக்கு போடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது அதிமுக அரசு.

கரோனா பொது முடக்கத்தின்போது தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என திமுக தலைவா் ஸ்டாலின் வலியுறுத்தினாா். அப்போது எதையும் வழங்காமல் இப்போது தோ்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டு ரூ.2,500 வழங்குகிறது அதிமுக அரசு.

ஜனநாயக நாட்டில் யாா் வேண்டுமானாலும் கட்சியைத் தொடங்கலாம். கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரால் திமுகவின் வாக்கு வங்கிக்கு எந்த பாதிப்பும் இல்லை. வரக்கூடிய சட்டப்பேரவை தோ்தலில் திமுகவின் வெற்றி உறுதி என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.