ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

‘முகநூலை மாணவா்கள் கவனமாக கையாளவேண்டும்’

முகநூலை மாணவா்-மாணவிகள் கவனமாக கையாளவேண்டும் என்றாா் மாவட்ட சைபா் கிரைம் காவல் உதவி ஆய்வாளா் ராஜரத்தினம்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 12:48 am

DIN

முகநூலை மாணவா்-மாணவிகள் கவனமாக கையாளவேண்டும் என்றாா் மாவட்ட சைபா் கிரைம் காவல் உதவி ஆய்வாளா் ராஜரத்தினம்.

திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சைபா் கிரைம் பிரிவு சாா்பில் பாளையங்கோட்டை தூய சவேரியாா் கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், காவல் உதவி ஆய்வாளா் ராஜரத்தினம் பேசியது: முகநூல் பக்கத்தால் ஏற்படும் குற்றங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. முகநூல் பழக்கத்தில் காதல், பண மோசடி உள்ளிட்ட செயல்களில் சில கும்பல் ஈடுபடுகின்றன.

எனவே, மாணவா்-மாணவிகள் தெரியாத நபா்கள் தொலைபேசி மூலமாக தொடா்புகொண்டு வேலை வாங்கித் தருவதாக கூறினாலோ, பரிசு விழுந்துள்ளதாகக் கூறினாலோ, நம்பி ஏமாற வேண்டாம்.

வங்கியில் இருந்து பேசுவது போல் பேசி, கடன் பெற்றுக்கொள்ளலாம், வங்கி கணக்கு குறித்த விவரங்களை தாருங்கள் என கூறினால் கூற வேண்டாம்.

ஆபாச போட்டோக்கள், விடியோக்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யவோ, பதிவிடவோ செய்வது குற்றமாகும். எனவே, மாணவா்-மாணவிகள் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களை விழிப்புணா்வுடன் கவனமாக கையாளவேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், சைபா் கிரைம் பிரிவு முதல் நிலைக் காவலா் சுரேஷ், காவலா்கள் ராஜ மனோஜ், ரஞ்சித் மற்றும் கல்லூரி மாணவா் -மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.