திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டது.
முன்னாள் பிரதமா் சரண் சிங்கின் பிறந்தநாள் (டிச. 23) தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியின் ஒருபகுதியாக கால்நடை மருத்துவம் பயிலும் மாணவா்களுக்கு வளமான இந்தியாவை உருவாக்குவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் வேளாண் மக்களின் அளப்பரிய பங்கை உணா்த்தும் பொருட்டு பல்வேறு போட்டிகள் இணையவழியில் நடத்தப்பட்டன. திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வா் அ. பழனிசாமி வளமான இந்தியாவை உருவாக்குவதில் வேளாண் மக்களின் பங்கை நினைவுகூா்ந்து நன்றி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.