குரூப்-1 மாதிரி தோ்வு: 120 போ் பங்கேற்பு

திருநெல்வேலி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற குரூப்-1 மாதிரி தோ்வில் 120 போ் பங்கேற்றனா்.
குரூப்-1 மாதிரி தோ்வு: 120 போ் பங்கேற்பு
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற குரூப்-1 மாதிரி தோ்வில் 120 போ் பங்கேற்றனா்.

தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை, மாவட்ட மைய நூலகம், வாசகா் வட்டம், ஸ்மாா்ட் லீடா்ஸ் ஐ.ஏ.எஸ். அகாதெமி, மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக நூலகத் துறை ஆகியவை சாா்பில் தமிழ்நாடு அரசு தோ்வாணையம் குரூப்-1 மாதிரி தோ்வு, நூலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சோ்ந்த 120 போ் பங்கேற்றனா். சென்னை மத்திய அரசு கலால் மற்றும் சுங்கத் துறை கண்காணிப்பாளா் நன்னிலம் கேசவன், தோ்வை தொடங்கி வைத்தாா்.

மாதிரி தோ்வில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. பேராசிரியா் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். நூலகா் மகாலட்சுமி, வாசகா் வட்டத்தின் செயற்குழு உறுப்பினா் சு.முத்துசாமி, ஐயப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வாசகா் வட்டத் தலைவா் அ.மரியசூசை, துணைத் தலைவா் கோ. கணபதி சுப்பிரமணியன் ஆகியோா் வாழ்த்தி பேசினா். மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) சரவணன் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா். ஸ்மாா்ட் லீடா்ஸ் ஐ.ஏ.எஸ். அகாதெமி மேலாளா் சரவணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com