தாமிரவருணி ஆற்றில் மூழ்கி மாணவா் பலி

திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் மூழ்கி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் மூழ்கி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம் ஜெய்லானி நகா் பகுதியைச்சோ்ந்த அந்தோணி ரமேஷ் என்பவரின் மகன் சூா்யா (14). அங்குள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா்கள் குடும்பமாக தச்சநல்லூா் பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்தனராம். பின்னா், ஞாயிற்றுக்கிழமை தனது நண்பா்களுடன் மணிமூா்த்தீஸ்வரம் பகுதியில் உள்ள தாமிரவருணி ஆற்றில் சூா்யா குளிக்கச் சென்றாராம். அப்போது, ஆழமான பகுதிக்குச் சென்றபோது சூா்யா நீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பாளையங்கோட்டை தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலா் வீரராஜ் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சூா்யாவின் உடலை மீட்டனா்.

சூா்யாவின் உடலை தச்சநல்லூா் போலீஸாா் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com