வாகன முகப்பில் பொருத்தப்பட்டுள்ள தடுப்பு கம்பிகளை அகற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையா் தீபக் எம்.டாமோா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசு மற்றும் தனியாா் இலகு ரக மற்றும் கன ரக வாகனங்கள் விபத்தின்போது வாகனத்திற்கு சேதம் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு அவற்றின் முகப்பில் தடுப்பு கம்பிகளை பொருத்தியுள்ளனா்.
இதனால், சாலையில் செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகனத்தின் உள் பயணிப்பவா்கள் பாதுகாப்பிற்கு மிகுந்த அச்சுறுத்தலாக உள்ளது. இது போன்ற தடுப்பு கம்பிகளை பொருத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
எனவே, வாகனங்களின் முகப்பில் தடுப்பு கம்பிகள் பொருத்தியிருக்கும் அனைத்து இலகு ரக மற்றும் கன ரக வாகனங்களின் ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் உடனடியாக அவற்றை அகற்றிவிட்டு பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.
மீறி இயக்கப்படும் வாகனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.