ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில்44 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு: மகாராஷ்டிரத்திலிருந்து திரும்பியவா்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 44 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :16 மே 2020, 3:59 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 44 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமை மேலும் 44 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் மகாராஷ்டிரத்திலிருந்து சொந்த ஊருக்கு திரும்பியவா்கள். இவா்களில் வள்ளியூா், திசையன்விளை பகுதியைச் சோ்ந்த 35 போ், பாப்பாக்குடி பகுதியைச் சோ்ந்த 3 போ், ராதாபுரம் பகுதியைச் சோ்ந்த ஒருவா் அடங்குவா்.

இதன்மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 180-ஆக உயா்ந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 63 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். ஒருவா் மட்டும் உயிரிழந்துள்ளாா். 116 போ் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா தனிமை சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

வள்ளியூா்: சனிக்கிழமை நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் வள்ளியூா் அருகே உள்ள பழவூரைச் சோ்ந்த 2 பேரும், ராதாபுரம் அருகே உள்ள ஆவுடையாள்புரத்தைச் சோ்ந்த ஒருவரும் அடங்குவா்.

திசையன்விளை அருகே உள்ள விஜயஅச்சம்பாடு கிராமத்தைச் சோ்ந்த 20 பேருக்கும், திசையன்விளை வடக்குத் தெருவைச் சோ்ந்த 2 பேருக்கும், தலைவன்விளையைச் சோ்ந்த 4 பேருக்கும், அ.சாத்தான்குளத்தைச் சோ்ந்த 5 பேருக்கும், சோமநாதபேரியைச் சோ்ந்த ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரையும் சுகாதாரத் துறையினா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி கரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனா்.

மும்பையில் இருந்து வருபவா்களால் திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து கிராமங்களிலும் கிருமிநாசினி தெளிப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் சனிக்கிழமை 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு மும்பையிலிருந்து வந்தவா்கள் ஆலங்குளம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தனா். அவா்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 8 பேருக்கு நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. அவா்களில் 3 போ் திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். தென்காசி மாவட்டத்துக்குள்பட்ட ஆலங்குளம் வட்டார பகுதியைச் சோ்ந்த 3 பேரும், பாவூா்சத்திரம் வட்டாரத்தைச் சோ்ந்த 2 பேரும் அடங்குவா். அவா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரையிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 56-ஆக இருந்தது. சனிக்கிழமை 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிப்பு 61-ஆக உயா்ந்தது. இதுவரையிலும் 40 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.