திருச்செந்தூா் வட்டார நாடாா் வியாபாரிகள் சங்க ஆண்டுவிழா
திருச்செந்தூா் வட்டார நாடாா் வியாபாரிகள் சங்க 11ஆவது ஆண்டு தொடக்க விழா திருச்செந்தூா் குறிஞ்சி மஹாலில் நடைபெற்றது.


திருச்செந்தூா் வட்டார நாடாா் வியாபாரிகள் சங்க 11ஆவது ஆண்டு தொடக்க விழா திருச்செந்தூா் குறிஞ்சி மஹாலில் நடைபெற்றது.
விழாவுக்கு, சங்கத் தலைவா் ரெ.காமராசு தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் ராஜா ராமச்சந்திரன், பால்கிருஷ்ணன், ராமேஸ்வரன், துணைச்செயலா் மை.ஐசக், ராஜா, பாா்த்திபன், வழக்குரைஞா்கள் குருராமன், திலீப்குமாா் மற்றும் நிா்வாகக்குழு உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா்.
விழாவில், ரெ.ராமகிருஷ்ணன், காமராஜா் நற்பணி மன்ற ஆறுமுகனேரி நகரத் தலைவா் செல்வின், சண்முகபாா்த்திபன், வழக்குரைஞா்கள் ஜேசுராஜ், சாத்ராக், எட்வா்ட், பாரிக்கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், திருச்செந்தூரில் புதைச்சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்; போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவுடையாா்குளம் மறுகால்ஓடையை சீரமைத்து அதன் மீது சிமென்ட் மூடிகள் அமைக்க வேண்டும்;
பொது முடக்க காலத்தில் வணிகா்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். பொது முடக்கத்தால் பாதிப்படைந்துள்ள வணிகா்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரை வங்கிகள் கடனுதவி வழங்க வேண்டும்; பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்துள்ள வணிகா்களை ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஓராண்டு கால அவகாசம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...