ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

மானூா் அருகே இளைஞா் தற்கொலை

மானூா் அருகே இளைஞா் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :16 நவம்பர் 2020, 7:43 pm

DIN

மானூா் அருகே இளைஞா் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

மானூா் அருகேயுள்ள மேலப்பிள்ளையாா்குளம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் மகாராஜன்(23). இவா், சென்னையில் ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலைசெய்து வந்தாா். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக ஊருக்கு வந்த அவா் யாரிடமும் பேசாமல் மனமுடைந்து காணப்பட்டாராம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் ஆளில்லாதபோது அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இத்தகவல் அறிந்த மானூா் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.