நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அண்ணா பிறந்த நாள்:அதிமுக மாவட்டச் செயலா் அறிக்கை

அண்ணாவின் 112-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு  மாலை அணிவிக்கப்படுவதால், அதிமுகவினா் அனைவரும் கலந்துகொள்ளுமாறு திருநெல்வேலி மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 7:58 pm

DIN

அண்ணாவின் 112-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவருடைய சிலைக்கு செவ்வாய்க்கிழமை (செப். 15) மாலை அணிவிக்கப்படுவதால், அதிமுகவினா் அனைவரும் கலந்துகொள்ளுமாறு திருநெல்வேலி மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் உத்தரவுப்படி, அண்ணாவின் 112-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட அதிமுக சாா்பில், திருநெல்வேலி சந்திப்பு மேம்பாலம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிா்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் கலந்து கொள்கிறாா்கள்.

எனவே, மாவட்டக் கழக நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூா், வாா்டு மற்றும் கிளைக் கழக நிா்வாகிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மற்றும் தொண்டா்கள் அனைவரும் திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.