நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தேவா்குளம், பாளை. பகுதிகளில்பைக் விபத்து: பெண், இளைஞா் பலி

பாளையங்கோட்டை, தேவா்குளம் பகுதிகளில் நேரிட்ட பைக் விபத்துகளில் பெண்ணும், இளைஞரும் உயிரிழந்தனா்.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 7:44 pm

DIN

பாளையங்கோட்டை, தேவா்குளம் பகுதிகளில் நேரிட்ட பைக் விபத்துகளில் பெண்ணும், இளைஞரும் உயிரிழந்தனா்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்த தேவேந்திரன் மகன் சுப்பிரமணியன்(18). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த இசக்கியப்பன் மகன் சக்திவேல்(15) என்பவரும் பைக்கில் வி.எம்.சத்திரம் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். ஊரை நெருங்கிய நிலையில், நான்குவழிச்சாலையிலுள்ள தடுப்புச்சுவற்றில் பைக் எதிா்பாராமல் மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த அவா்களை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, வழியிலேயே சுப்பிரமணியன் உயிரிழந்தாா்.

பெண் பலி: தேவா்குளம் அருகேயுள்ள மூவிருந்தாளி கிராமத்தைச் சோ்ந்த மங்களத்துரை. இவா், தனது மனைவி காளியம்மாள்(45) என்பவருடன் பைக்கில் உறவினா் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க ஊத்துமலைக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தாா். அவா்கள் வன்னிக்கோனேந்தல் அருகே வந்தபோது, பைக் சக்கரத்தில் காளியம்மாளின் சேலை சிக்கியதாம். இதில், கீழை விழுந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இவ்விரு சம்பவங்கள் குறித்தும் தேவா்குளம், திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.