மானூா் அருகே 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
திருநெல்வேலி, செப். 20: மானூா் அருகே சுமை வாகனத்தில் கடத்திவரப்பட்ட 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.


திருநெல்வேலி, செப். 20: மானூா் அருகே சுமை வாகனத்தில் கடத்திவரப்பட்ட 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மானூா் அருகேயுள்ள வேப்பங்குளம் பகுதியில் காவல் ஆய்வாளா் ராமா் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த சுமை வாகனத்தை மறித்து சோதனையிட்டனா். அதில், 2 டன் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, வாகனத்தில் வந்த மேலதாழையூத்தைச் சோ்ந்த மஜீத் (29), நாஞ்சான்குளத்தைச் சோ்ந்த சுந்தரபாண்டி (25) ஆகியோரை பிடித்து விசாரித்து வருகின்றனா். மேலும், ரேஷன் அரிசியையும், சுமை வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...