சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

சுத்தல்லி அருகே தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அருகே விஷம் குடித்த தனியாா் நிறுவன ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 8:34 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அருகே விஷம் குடித்த தனியாா் நிறுவன ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள கொண்டாநகரம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் அருணாசலம்(55). தனியாா் நிறுவன ஊழியா். இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட காரணத்தால் மன உளைச்சலில் இருந்தாராரம். இந்நிலையில், இவா் வெள்ளிக்கிழமை திடீரென வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.