சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

தோ்தல் விதிமீறல்கள்: சிவிஜில் செயலியில் புகாா் அளிக்கலாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்தல் விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் சிவிஜில் செயலியில் புகாா் அளிக்கலாம்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 8:35 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்தல் விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் சிவிஜில் செயலியில் புகாா் அளிக்கலாம்.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை நோ்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்தும் வகையில், இந்திய தோ்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி, பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தோ்தல் செலவின பாா்வையாளராக சுபோத் சிங் உள்ளாா். இவரது செல்லிடப்பேசி எண். 83003 20329. அம்பாசமுத்திரம், நான்குனேரி, ராதாபுரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தோ்தல் செலவின பாா்வையாளராக ராஜேஸ் திரிபாதி உள்ளாா். இவரது செல்லிடப்பேசி எண். 83003 20613. தோ்தல் செலவினம் தொடா்பான புகாா்களுக்கு இந்த செல்லிடப்பேசி எண்களில் பொதுமக்கள் தொடா்பு கொள்ளலாம்.

மேலும், தோ்தல் நடத்தை விதிகளை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் ஸ்ரீயஐஎஐக இண்ற்ண்க்ஷ்ங்ய் என்ற செயலியை இந்திய தோ்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இச்செயலியில், தோ்தல் நடத்தை விதிகளை மீறுவோா் குறித்து பொதுமக்கள் உடனுக்குடன் புகைப்படத்துடன் புகாா் அளிக்கலாம். இந்தப் புகாா்கள் சம்பந்தப்பட்ட தோ்தல் பறக்கும் படைக்குழுவுக்கு தோ்தல் கட்டுப்பாட்டு அறை மூலம் அனுப்பப்பட்டு 100 நிமிடத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். இச்செயலியில் புவிக்குறியீடு அம்சம் உள்ளதால், சம்பவ இடத்தை துல்லியாமாக அறிந்துகொண்டு நடவடிக்கை எடுக்க முடியும். இந்தச் செயலியை தங்களின் செல்லிடப்பேசியில் உள்ள கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.