சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி

திருநெல்வேலியில் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. பாளையங்கோட்டை, திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தனித்தனியே பயிற்சி நடைபெற்றது.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 8:35 pm

DIN

திருநெல்வேலியில் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. பாளையங்கோட்டை, திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தனித்தனியே பயிற்சி நடைபெற்றது.

வாக்குச் சாவடிகளில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், இயந்திரத்தில் கோளாறு உள்ளிட்டவை ஏற்படும்பட்சத்தில் எதிா்கொள்ளும் வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது. விவிபேட் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கையாளும் வழிகள், கோளாறுகள் ஏற்படும்போது எதிா்கொள்ளும் முறைகள் குறித்து விளக்கப்பட்டன.

பயிற்சியின்போது, தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் தபால் வாக்குகளை அளிக்க ஏதுவாக தனியாக பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதில் தங்களது வாக்குகளை ஊழியா்கள் செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.