பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தாமிரவருணி ஆற்றில் கூட்டமாக குளிக்கத் தடை

திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் புதன்கிழமை முதல் கூட்டமாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு அறிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :13 ஏப்ரல் 2021, 2:10 pm

DIN


திருநெல்வேலி: திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் புதன்கிழமை முதல் கூட்டமாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

"கரோனா நோய் பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதன்கிழமை முதல் தாமிரவருணி ஆற்றில் கூட்டமாக குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த தடையானது மறுஅறிவிப்பு வரும் வரை தொடரும். அதேபோன்று பாபநாசத்திலும் கூட்டமாக குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட்டு, முழு ஒத்துழைப்பு கொடுக்க கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.