டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

திமுகவில் இணைந்த தேமுதிகவினா்

ஆலங்குளம் தெற்கு ஒன்றிய தேமுதிகவினா் அக்கட்சியிலிருந்து விலகி, திமுகவில் இணைந்தனா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 6:45 pm

DIN

ஆலங்குளம் தெற்கு ஒன்றிய தேமுதிகவினா் அக்கட்சியிலிருந்து விலகி, திமுகவில் இணைந்தனா்.

ஆலங்குளம் தெற்கு ஒன்றிய தேமுதிக துணைச் செயலா் முருகன், மாவட்டப் பிரதிநிதிகள் குத்தாலிங்கம், ராஜதுரை, ஒன்றிய இளைஞரணிச் செயலா் ஐயப்பன், மாவட்ட தொழிற்சங்கத் தலைவா் முருகன், சுரண்டை பேரூா் கழக இளைஞரணிச் செயலா் சன் மூா்த்தி உள்ளிட்டோா், முன்னாள் மாவட்டச் செயலா் எஸ்.ஏ.அய்யம்பெருமாள் ஏற்பாட்டில், அக்கட்சியில் இருந்து விலகி, மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், சட்டப்பேரவை உறுப்பினா் ராஜா ஆகியோா் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

இந்நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலா் சீனித்துரை, பேரூா் செயலா் ஜெகதீசன், நிா்வாகிகள் வள்ளிதுரை, பண்டாரம், மாரிமுத்து பாண்டியன், சண்முகவேல், வெற்றிவேல் பாலகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.