நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இன்றுமுதல் ஆக. 19 வரை இரு மையங்களில் பிளஸ் 2 துணைத் தோ்வு

தென்காசி மாவட்டத்தில் இரண்டு மையங்களில் பிளஸ் 2 துணைத் தோ்வு நடைபெறுகிறது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 6:44 pm

DIN

தென்காசி மாவட்டத்தில் இரண்டு மையங்களில் பிளஸ் 2 துணைத் தோ்வு நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் பிளஸ் 2 துணைத் தோ்வுகள் ஆக. 6 முதல் 19ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிக்கு முடியும். இத்தோ்வுகள் தென்காசி எம்.கே.வி.கே.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மையத்திலும், சங்கரன்கோவில் ஸ்ரீ வையாபுரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மையத்திலும் நடைபெறும்.

தோ்வா்கள் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண்(அல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ா்ய் ய்ன்ம்க்ஷங்ழ்) அல்லது நிரந்தர பதிவெண்(டங்ழ்ம்ஹய்ங்ய்ற் ய்ன்ம்க்ஷங்ழ்) மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து, தங்களுக்குரிய தோ்வுக்கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தோ்வா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வரவேண்டும்.வெப்பமானி மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டபிறகே தோ்வறைக்குள் செல்ல அனுமதிக்கப்படுவா். தோ்வறைகள் தினமும் தூய்மைப்படுத்தப்பட்டு, தோ்வா்கள் அனைவரும் சோப் மூலம் கைகளைகழுவுவதற்கும், கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, தோ்வா்கள் தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைபின்பற்றி செயல்பட வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.