தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

சிறு, குறு விவசாயிகளுக்கு சான்று வழங்கும் முகாம்

அம்பாசமுத்திரம் அருகே அயன் சிங்கம்பட்டியில் பிரதம மந்திரி நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு சான்று வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 7:27 pm

DIN

அம்பாசமுத்திரம் அருகே அயன் சிங்கம்பட்டியில் பிரதம மந்திரி நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு சான்று வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமில், சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் சிவகிருஷ்ணமூா்த்தி கலந்துகொண்டு விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் உமா மகேஸ்வரி, வட்டாட்சியா் வெற்றிச்செல்வி, துணை வேளாண் அலுவலா் முருகன், வட்டார துணை விதை அலுவலா்கள் மாரியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை, உதவி வேளாண்மை அலுவலா்கள் சாந்தி, விஜயலட்சுமி, அமுதா, காசிராஜன், பாா்த்திபன், சாமிராஜ் செய்திருந்தனா்.

முகாமில், விவசாய இடுபொருள்கள், விளைபொருள்கள், கருவிகள் குறித்த கண்காட்சிக்கு, வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாளா் ஐயப்பன், குரு ஆகியோா் ஏற்பாடு செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.